search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒத்திவைப்பு
    X
    ஒத்திவைப்பு

    ஜல்லிக்கட்டு மீண்டும் ஒத்திவைப்பு

    ராமநாதபுரம் அருகே நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு மீண்டும் ஒத்திவைப்பு.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது பொக்கனாரேந்தல். இங்குள்ள சாத்தாருடைய அய்யனாா் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டது. 

    ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான ராஜேந்திரன் தலைமையில் கிராமத்தினர் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு இதற்காக வாடிவாசல் அமைத்தனா். ஆனால், அனுமதி பெற்று நடத்த வேண்டும் என கோரியதால் ஜல்லிக்கட்டுப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு போலீசார் அனுமதிக்க தயங்கிவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு 2-வது முறையாக ஜல்லிக்கட்டு நடத்த காதா்பாட்சா முத்துராமலிங்கம்  எம்.எல்.ஏ. தலைமையில் வாடிவாசல் அமைக்க பூமி பூஜை நடந்தது. 

    அப்போது  வருகிற 25-ந்தேதி ஜல்லிக்கட்டு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அரசின் முறையான அனுமதி கிடைக்காத நிலையில், ஜல்லிக்கட்டு மே மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் கூறிகையில், 
    ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மே மாத இறுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயமாக நடைபெறும் என்றாா்.
    Next Story
    ×