என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைதான ரஞ்சித்
  X
  கைதான ரஞ்சித்

  சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  மதுரை

  மதுரையில் 8-ம் வகுப்பு மாணவனை வாலிபர், கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. 

  இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

  கோரிப்பாளையம் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் நேற்று இரவு வீட்டின் முன்பு சைக்கிளை துடைத்து கொண்டிருந்தான். அப்போது அவனை ஒரு வாலிபர் கத்திமுனையில் குடோனுக்கு தூக்கி சென்றார். அங்கு அவர் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. சிறுவன் சத்தம் போடவே, வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

  இது குறித்து சிறுவனின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டது, மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த  வாலிபர் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, செல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

  அவர் மீனாம்பாள்புரம், அழகர் மகன் ரஞ்சித் குமார் (20) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித் குமாரை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×