என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
  X
  திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

  திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சொத்து வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சொத்து வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. 

  கூட்டத்திற்கு துணைத்தலைவர் சபியுல்லா முன்னிலை வகித்தார், அனைவரையும் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா வரவேற்றார். 

  அப்போது கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

  வெற்றிகொண்டான் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) திருமால் நகர் பகுதியில் 4 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அந்த வழியாக ஒரு பொது மக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக உள்ளது எனவே அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

  சங்கீதா வெங்கடேஷ் (நகராட்சித் தலைவர்) ; இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தலாம்.

  வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர்; தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி ஏபிசி என பிரிக்கப்பட்டு கூடுதலாக சதுரடிக்கு10 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு சொத்து வரி உயர்த்தி தமிழக அரசு அறிவிக்கும் அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டம் முடியும் தருவாயில் சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக கூறி வெளியே சென்றனர்.

  கடைசி நேரத்தில் வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்களை பார்த்து திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் முதலிலே தெரிவிக்க வேண்டும் கடைசி நேரத்தில் பெயருக்காக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்ப ஏற்பட்டது.
  Next Story
  ×