என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சிய போக்கை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. கவுன்சிலர்
குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சிய போக்கை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கூட்டணி கட்சிகளான புரட்சிபாரதம், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் நகர்மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் சவுந்தரராசனிடம் வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும்.
ஒவ்வொரு வார்டிற்கும் 5 லட்ச ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும், வார்டுகளில் துப்புரவு பணிக்கு 5 பேர் நியமிக்கப்படும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய திமுகவின் உறுப்பினர் கோவிந்தராஜ் நகராட்சி அதிகாரிகள் சரிவரச் செயல்படுவது இல்லை எனவும் பல முறை அடிப்படை பிரச்சினைகள் குறித்து கூறியும் நடவடிக்கை இல்லை என தெரிவித்து கருப்புச் சட்டையுடன் கலந்துகொண்டார்.
தனிநபர் ஒருவர் எங்கள் வார்டில் கால்வாயை அடைத்து விட்டதால் மழைக்காலத்தில் கழிவுநீர் பல வீடுகளுக்குள் புகுந்து புகுந்துவிட்டது நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர்.
பெரும்பாலான உறுப்பினர்கள் வார்டுகளில் கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்வதில்லை, குப்பை களை எடுப்பதில்லை சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
இந்த கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு நகர சபை தலைவர் உத்தரவிட்டார்.
Next Story