என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
    X
    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    வாய்க்கால் தூர்வாரும் பணிகள் 31-ந் தேதிக்குள் முடிவடையும் - கலெக்டர் தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூர் மாவட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிவடைய உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் ெதரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரம், அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட ஆனைவடபாதி பாம்பாக்கை கன்னி வாய்க்கால் (சி மற்றும் டி வாய்க்கால்) 800 மீ தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர் பால–சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்கள் மூலமாக 60 சி மற்றும் டி வாய்க்கால்களில் 585 கி.மீ. தூரம் ரூ.154 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    ஏ மற்றும் பி வாய்க்–கால்களில் 1200 கி.மீ. தூரம் பொதுப்பணித்துறையின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழுள்ள பணியாளர்கள் மூலமும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தூர்வாரும் பணிகள் அனைத்தும் வருகின்ற மே31-ந்தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. இதுவரை 70 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ரெகுநாதன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் பாலசந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×