என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் பாட்டில் அகற்றப்பட்ட காட்சி.
பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கி போராடிய நாய்
பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கி ஒரு வாரமாக நாய் போராடியது.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் தெரு நாய் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள உணவு உண்ணும்போது தலை மாட்டிக்கொண்டது.
ஒரு வாரமாக அதை வெளியே எடுக்க முடியாமல் சத்தம் போட்டு நாய் போராடி கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அந்த நாய் ஓடி விட்டது.
இதுகுறித்து புதுவை பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இயக்கத்தின் தலைவர் கால்நடை டாக்டர் செல்வமுத்து அப்பகுதிக்கு மீட்பு குழுவினருடன் சென்று சிறிய வலையை வீசி நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி தலையில் மாட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை அகற்றினர்.
பின்னர் நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். மீட்பு பணிக்கு பிராணிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராகுல், தர்மா, சதீஷ், அப்பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உதவி புரிந்தனர்.
புதுவையில் கால்நடைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என கால்நடை மருத்துவர் செல்வமுத்து தெரிவித்தார்.
Next Story