என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கொல்லம்பாளையம் ெரயில்வே நுழைவு பாலம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையில் தட்டு தடுமாறி ஊர்ந்து செல்லும் வாக
    X
    கொல்லம்பாளையம் ெரயில்வே நுழைவு பாலம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையில் தட்டு தடுமாறி ஊர்ந்து செல்லும் வாக

    ரூ.50 லட்சம் மதிப்பில் குண்டும், குழியுமான சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவுபாலம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குண்டும், குழியுமான சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவுபாலம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குண்டும், குழியுமான சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம் பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் கீழ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் கரூர், மதுரை திருச்சி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள், வாகனங்கள், மற்றும் முத்தூர், பூந்துறை பகுதியில் இருந்த வரக்கூடிய வாகனங்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

    தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை உள்ளது. இங்கு எப்போதும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. மழை நேரங்களில் குண்டும், குழியுமான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. 

    பல வருடங்களாக இந்த பிரச்சினை நீடித்து வருவதால் இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந்  தேதி 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மொபட்டில் காளைமாடு சிலையை தாண்டி ரெயில்வே நுழைவு பாலம் கீழே உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது குண்டும், குழியுமான சாலையால் நிலைகுலைந்த அவர் மொபட்டில் இருந்து கீழே தவறி விழுந்தார். 

    அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி   அவர் தலைமீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குண்டும் குழியுமான சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். 

    இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் குண்டும், குழியுமான சாலை மற்றும் இந்த பகுதியை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவுபாலம் பகுதியை மேம்படுத்தும் பணிக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். 

    பணி தொடங்கும் போது இந்த வழியாக இருசக்கர மற்றும் கார்கள் வந்து செல்லலாம். ஆனால் பஸ், லாரிகள் மாற்று வழி பாதையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி முத்தூர் ரோடு, கரூர் ரோட்டில் இருந்து வரும் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் வண்டிப்பாளையம் பழைய ரெயில்வே ரோடு வழியாக, காளைமாடுசிலை  வழியாக ஈரோடு பஸ் நிலையத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

     இதேபோல் பூந்துறை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர்,  சென்னிமலை ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு செல்ல மாற்றியமைக்கப் பட்டுள்ளது. பணிகள் தொடங்கிய 60 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×