search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு முழுவதும் குறைந்தது

    கோடைக்காலம் மற்றும் குடிநீர் தேவை அதிகரிப்பால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    செங்குன்றம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன.அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 7,601 மி.கன அடி தண்ணீர் (7.6.டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது.

    கோடைக்காலம் மற்றும் குடிநீர் தேவை அதிகரிப்பால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த வாரம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு 841 கன அடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு முற்றிலும் குறைந்து உள்ளது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன.அடி இதில் தற்போது வெறும் 134 கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 12 சதவீதம் ஆகும்.

    தண்ணீர் இருப்பு குறைந்ததால் சோழவரம் ஏரி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. ஏரியில் இருந்து 10 கன அடி தண்ணீர் குடிநீருக்கு வெளியேற்றப்படுகிறது.

    எனவே சோழவரம் ஏரி விரைவில் வறண்டு வடும் நிலையில் உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன. அடி ஆகும். இதில் 3082 மி.கன அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 2708 மி.கன. அடியும் (மொத்த கொள்ளளவு) 3645 மி.கன.அடி பூண்டி ஏரியில் 1222 மி.கன. அடியும் (மொத்த கொள்ளளவு 3231 மி.கன. அடி) தண்ணீர் இருப்பு உள்ளது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 455 மி.கன அடி தண்ணீர் (மொத்த கொள்ளளவு 500 மி.கன அடி) இருப்பு உள்ளது.

    Next Story
    ×