search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோதல்
    X
    மோதல்

    சேத்தியாதோப்பு அருகே மது குடிக்க சென்ற இருதரப்பினர் மோதல்

    சேத்தியாதோப்பு அருகே மது குடிக்க சென்ற இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது.

    இங்கு நேற்று மாலை மது வாங்க மதுவானை மேடு பகுதியைச் சேர்ந்த ரகுபதி மற்றும் இளையராஜா இருவரும் தனது மோட்டார் சைக்கிளில் வந்தனர். மேலும் அம்மன் குப்பம் பகுதியை சேர்ந்த தர்மசாஸ்தா என்பவரும் தனது மினி லாரியில் மது வாங்க வந்தார்.

    அப்போது டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ரகுபதி மற்றும் மினி லாரியில் வந்த தர்மசாஸ்தா இருவரது வாகனங்களும் உரசுவது போல் சென்றதால் அவர்களுக்கிடையே வாய்த்த கராறு ஏற்பட்டது.

    இந்த தகராறில் தர்மசாஸ்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரகுபதியை அவருக்கு சொந்தமான கொட்டகைக்கு சென்று தாக்கியுள்ளனர். இதை பார்த்த ரகுபதியின் உறவினர்கள் தர்மசாஸ்தாவை தாக்கினர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் தர்ம சாஸ்தாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்த தர்மசாஸ்தாவின் உறவினர்கள் விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலை அருகே அம்மன் குப்பம் பகுதியில் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி. சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்ய முயற்சித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதுகுறித்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×