என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுச்சேரி:
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டாக தேர் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.
இதையடுத்து பிரம்மோற்சவ தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சாமி வீதியுலா நடக்கிறது. வருகிற 10-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு கோவில் முன்பு தேரோட்டம் தொடங்கி மாட வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறது. விழாவில் கவர்னர் தமிழயிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். 12-ந் தேதி நண்பகல் தீர்த்தவாரியும், மாலை தெப்ப உற்சவமும், 13-ந் தேதி முத்து பல்லக்கும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலரும் சிறப்பு அதிகாரியுமான திருவரசன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






