என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரவேண்டும் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ஆட்டுப்பட்டியில் 600 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரவேண்டும் என்று ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் ஓட்டல் அண்ணாமலையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அவரது முன்னிலையில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பேசியதாவது:-
உப்பளம் தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அனைத்து வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் நடைபாதை சாலையாக சிமெண்ட் அடுக்குகளை பயன்படுத்துகின்றனர், பல வருட காலமாக அந்த சிமெண்ட் அடுக்குகள் உடைந்த நிலையில் மேலும் அடிக்கடி விபத்துக்கள் நேரிடும் வகையிலும் பள்ளமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இதை இணைத்து மக்களை பாதுகாத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும் திப்புராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பை 600 சதுர அடியாக மாற்றி கட்டித் தரவேண்டும். ஆடுப்பட்டியில் தடையின்மை சான்றிதழ் அளிக்காமல் உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நிதி ஒதுக்கி உள்ளீர்கள் ஆனால் பணிகள் நடக்காமல் நின்றுவிடும் நிலை உள்ளது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று ஆட்டுப்பட்டியில் வாழும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 600 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






