என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலம்
    X
    பாலம்

    விபத்துக்களை ஏற்படுத்தும் தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

    வாடிப்பட்டி அருகே விபத்துக்களை ஏற்படுத்தும் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் சோழவந்தான் சாலையிலிருந்து பிரிவு வழியாக ஊருக்குள் செல்லும் வழியில் பெரியாறு பிரதான கால்வாயின் கிளை கால்வாய் கட்ட குளம் கண்மாய் வரை செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே சிறு பாலம் ஒன்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. 

    அப்போது பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இருந்தது.ஆனால் காலப்போக்கில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தார்சாலை சீரமைக்கப்படும் போது சிறுகச்சிறுக உயரம் கூட்டப்பட்டு தற்போது தடுப்புச்சுவர் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டு தார்சாலை பாலத்தை விட உயர்ந்து உள்ளது. 

    இதனால் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தின் மீது வாகனங்கள் வரும்போது திடீரென்று விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதேபோல் பாலத்தின் இருபுறமும் உள்ள பெரியாறு கால்வாயில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. இதனால் வாகனத்தில் வருபவர்கள் சாலை இருப்பதாக நினைத்து முட்புதருக்குள் சிக்கும் நிலை ஏற்படுகிறது. 

    எனவே போர்க்கால அடிப்படையில் கால்வா யினை சுத்தப்படுத்தி முட்புதர்களை பொதுப்ப ணித்துறையினர் அப்பு றப்படுத்த வேண்டும் என்றும் மேலும் தடுப்புச்சுவரை மீண்டும் உயரமாக கட்டி சாலையை விரிவு படுத்தினால் வருமுன் காப்போம் என்பதன்  அ டிப்படையில் எதிர்காலத்தில் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×