என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாலி பறிப்பு
கோவில் கும்பாபிஷேகத்தில் 2 பெண்களிடம் 7 பவுன் பறிப்பு
திருமங்கலம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 2 பெண்களிடம் 7 பவுன் பறிப்பு சம்பவம் நடந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள தூம் பக்குளம் புதூரில் அமைந்துள்ள மலையாள பகவதி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் இரண்டு பெண்களிடம் நகையை பறித்து சென்றனர். ஓ. ஆலங்குளத்தை சேர்ந்த முருகேசன் மனைவி வெயிலாயி (வயது 51) என்பவரிடம் 4 பவுன நகையையும், இதேபோல ராமநாதபுரத்தை சேர்ந்த புத்தி சிகாமணி என்பவரின் மனைவி ராஜாத்தி (60) அணிந்திருந்த 3 பவுன் நகையையும் மர்ம நபர்கள் பறித்து சென்றார்கள். இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் தானேஷ் பாலமுருகன். இவருடைய மனைவி அர்ச்ச னாதேவி (32). இவர் திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
சம்பவத்தன்று அர்ச்சனா தேவி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென மறித்து அர்ச்சனாவின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட அர்ச்சனா தேவி கூச்ச லிட்டதால் மர்ம நபர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்
Next Story






