என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமுகையில் நீட் தேர்வுக்கு பயந்து பெண் டாக்டர் தற்கொலை

    நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக ராசிக்கு மனதில் பயம் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
    சிறுமுகை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக்(28). இவரது மனைவி ராசி(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது.

    ராசி கடந்த 2020-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். பின்னர் அவர் மருத்துவ உயர் படிப்பான எம்.டி. சேருவதற்கு தயாராகும் வகையில், தனது பெற்றோர்  வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்தார்.

    இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக ராசிக்கு மனதில் பயம் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராசி வீட்டின் 3-வது மாடியில் படிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் சாப்பிடவரவில்லை. அவரது தாயார் செந்தாமரை மகளை பார்க்க மாடிக்கு சென்றார்.

    அப்போது, அறைக்கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந் அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது, ராசி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் வைத்து இன்று ஆர்.டி.ஓ. தலைமையில் பெண்ணின் பெற்றோர், பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×