என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கோவை வந்த மருத்துவ மாணவி மீட்பு
மாணவி சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கோவை:
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த போலீசார் அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம்பெண் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அந்த மாணவி திருவெற்றியூரை சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கோவை வந்தார். பின்னர் மாணவிக்கு அறிவுரை வழங்கி தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Next Story






