என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளையடிக்கப்பட்ட உரக்கடை
மயிலாடியில் பட்டப்பகலில் உரக்கடைக்குள் புகுந்து கொள்ளை
மயிலாடியில் பட்டப்பகலில் உரக்கடைக்குள் புகுந்து கொள்ளை - கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே மயிலாடிபுதூரைச் சேர்ந்தவர் பாலசுந்தரலிங்கம் (வயது 65). மயிலாடி பகுதியில் பாலசுந்தரலிங்கம் உரக்கடை நடத்தி வருகிறார். 35 ஆண்டுகளாக இந்த கடை செயல்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று பாலசுந்த ரலிங்கம் மதிய உணவு உண்பதற்காக கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கடையில் இருந்த எடை கற்கள் மற்றும் பட்டறையில் இருந்த ரூ.2500 பணம் ஆகியவற்றை காணவில்லை.
பாலசுந்தரலிங்கம் வீட்டுக்குச் செல்வதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் எடை கற்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது பற்றி பாலசுந்தரலிங்கம் தனது மகனிடம் தெரிவித்தார். அவர் உடனே இது பற்றி போலீசில் புகார் செய்ய அறிவுறுத்தினார். அதன்படி பாலசுந்தரலிங்கம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிமேனகா மற்றும் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கடைக்குள் புகுந்து எடை கற்களையும், பணத்தையும் கொள்ளையடித்துச் செல்வது பதிவாகி இருந்தது. அதில் பதிவான வாலிபரை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






