என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு மாவட்ட தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாயில் வெள்ளை துணி கட்டி மவுன ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி மவுன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிவுறுத்திலின்படி ராஜீவ் காந்தியின் படுகொலை க்கு காரணமான பேரறிவா ளனின் விடுதலை க்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் மௌன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பாக தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் தஞ்சை ரயிலடியில் மௌன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி சிங்காரம், மாவட்ட காங்கிரஸ் துணைத்ததலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் பூதலூர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜீ, மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபு மண்கொண்டார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர்.சிவசங்கர சூரியமூர்த்தி, மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், வட்டாரத்தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, சேக் இப்ராகிம் ஷ, ஐய்யப்பன், கணேசன், முத்து, பட்டுக்கோட்டை நகர தலைவர் ரவிக்குமார், அதிராம்பட்டிணம் நகர தலைவர் தமீம் அன்சாரி, மாவட்ட சிறுபாண்மை பிரிவுத்தலைவர் நாகூர் கனி, சோழமண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா.வெங்கட்ராமன், மாவட்ட விவசாய பிரிவுத்தலைவர் சீனி கருப்பையா, மாவட்ட மகளிர் அணி செயலாளர்சசிகலா, சித்திரக்குடி ஆண்டவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, இளையபாரத், ரமேஷ் சிங்கம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர்.சுரேஷ், மேல உளுர் சம்பத் வாண்டையார், மாவட்ட கலை இலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்.டி.யூ.சி.மோகன்தாஸ், மணிவாசகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






