என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேகத்தடை இன்றி விபத்து ஏற்படும் வகையில் உள்ள திருக்கருகாவூர் கடைவீதி பகுதி.
வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து சாலியமங்கலம் வரையிலான மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கிராமமக்களின் அனைத்து தேவைக்கும் கிராமமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையையும், தஞ்சை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் நெடுஞ்சா லையாக உள்ளதால் இந்த நெடுஞ்சாலையில் லாரிகள், டிப்பர்கள் என தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், உள்பட நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன.
கிராமமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அதிகளவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்தித்து உயிர் பலியாகி வருகின்றனர்.
பாபநாசத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலியமங்கலம் நெடுஞ்சாலையானது வேகத்தடையில்லாத நேர்வழி சாலையாக உள்ளதால் விபத்து ஏற்படுவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.
எனவே போக்குவ ரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் திருக்கருகாவூரில் மெலட்டூர் பிரிவு சாலை, நாகலூர் கடைவீதி, இரும்புதலை, இடையிறுப்பு, களஞ்சேரி உள்பட முக்கிய கிராம சாலைகள் இணைப்பு பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






