என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால் வெட்டும் தொழில் பாதிப்பு
குலசேகரத்தில் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கோதையார், பேச்சிபாறை, மோதிரமலை, குலசேகரம், மணலோடை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பால் வெட்டும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். கோதையார் சுற்று வட்டார பகுதிகளில் அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பால் வெட்டும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆற்றங்கரையோரம் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் அதன் அரு கில் இருக்கும் செங்கல் சூளைகளில் வேலை செய்ய முடியாமல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story






