என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர் மாயம்- மனைவி போராட்டம்
வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி:
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது36). இவர் மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டாவது நிலையத்தில் உதவி பொறியாளராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை அனல் மின்நிலைய குடியிருப்பில் இருந்து வேலைக்கு சென்ற அரிகிருஷ்ணன் பின்னர் திரும்பி வரவில்லை அவர் மாயமாகி இருந்தார். இதற்கிடையே அவரது மனைவி இளவரசி இன்று காலை வடசென்னை அனல்மின்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பணிச்சுமை காரணமாக அவர் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரிகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
Next Story






