என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய் கடித்து காயம் அடைந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போடி அருகே வெறிநாய்கள் கடித்து 20 பேர் படுகாயம்
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்கள் கடித்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெறி பிடித்து சுற்றித் திரியும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தியும் கடித்தும் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெறிபிடித்த நாய்கள் கடித்ததால் ரேபிஸ் மற்றும் ஆபத்தான நோயால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தெருக்களில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 20-க்கும் மேற்பட்டோர் தீவிரமான வெறிநாய்க்கடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்
இந்த வெறி நாய்க்கடி தாக்குதலால் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள், சிறார்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த பல வருடங்களாக நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாததால் அதன் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாலும், நோய்தொற்றுடன் அதிக நாய்கள் சுற்றி வருவதாலும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story