என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ பார்வையிட்ட காட்சி.
உடேதுர்கம் ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் விரைவில் சீரமைப்பு- கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ தகவல்
By
மாலை மலர்19 May 2022 10:25 AM GMT (Updated: 19 May 2022 10:25 AM GMT)

உடேதுர்கம் ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் விரைவில் சீரமைக்கப்படுமென கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் ஊராட்சி யு.குருபரப்பள்ளி கிராமத்தில் 17 பழங்குடியின குடும்பங்களுக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் 94-95-ம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இவை மோசமான நிலையில் உள்ளன.
மேலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அறிந்த வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி நேரில் சென்று தொகுப்பு வீடுகளை பார்வையிட்டார்.
அப்போது வீடுகளை சீரமைக்க வேண்டும் என கெலமங்கலம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகிலன் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சம்பங்கி ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
அங்கிருந்து புறப்பட்ட அவர் அப்பகுதியில் அரசு நிலத்தில் குடிசை போட்டு வசித்து வந்த 12 குடும்பங்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரசு நிலத்தை அதிகாரிகள் மூலம் தேர்வு செய்து பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக முனுசாமி எம்.எல்.ஏ., வாக்குறுதி அளித்தார். மேலும் யு.கொத்தப்பள்ளியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியை ஆய்வு செய்த அவர் புதிய கட்டடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்வதாக மக்களிடம் உறுதியளித்தார்.
ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி சீனிவாசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன் முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், துணைசெயலாளர் முனுசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story
×