என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  உளுந்தூர்பேட்டை:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நம்பிகுளம் தெருவில் வசித்து வருபவர் பி.கெங்கமுத்து (35) கூலித்தொழிலாளி.

  இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவர் அதன் பிறகு காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

  நேற்று காளிகோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் கெங்கமுத்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து இந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்சபெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் தீயணைப்புகுழுவினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கிணற்றின்மேல் பகுதியில் படுத்து தூங்கிய வாலிபர் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கெங்கமுத்து மனைவி சரிதா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
  Next Story
  ×