என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போளூர் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
  போளூர்:

  திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகின்றது. 

  இதனால் வயல்வெ ளிகளை சூழ்ந்த தண்ணீர் அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள ஓடைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  இந்நிலையில் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தை சேர்ந்த சதாசிவம் விவசாயி இவரது மனைவி சுதா (வயது 30) இவர் நேற்று முன்தினம் தங்கள் நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாடு இருக்கிறதா மழையில் எங்காவது சென்று விட்டதா என்று பார்ப்பதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஓடையை கடந்து செல்ல முயன்றார். 

  அப்போது வெள்ளத்தில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×