என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் விசாரணை
காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு- போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை சிவன் கோவில் பகுதியில் பயன்படுத்தாத கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் பார்த்து எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கெங்கமுத்து என்பது தெரியவந்தது.
மேலும் இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story