என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனுநீதி நாள் முகாம் நடந்த காட்சி.
அப்துல்லாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்
அப்துல்லாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இன்று காலை மனுநீதி நாள் முகாம் நடந்தது.
தாசில்தார் செந்தில் வரவேற்று பேசினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பேபி இந்திரா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் 49 பயானாளிகளுக்கு ரூ 2 லட்சத்து 37 ஆயிரத்து 518 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மரக்கன்று நட்டார்.
Next Story






