என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்.
வேலூரில் தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டி வியாபாரிகள் மனு
வேலூரில் தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு, இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத் தலைமையில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி வேண்டும் அரசு தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை என்பதை வணிகர் சங்கம் ஏற்றுக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு துணை நிற்கின்றது.
இந்த நிலையில் தின்பண்ட தயாரிப்புகளான முறுக்கு, எல்லடை காராபூந்தி போன்ற பொருட்கள் பார்சல் செய்யப்பட்ட முதன்மை பேக்கிங் என நிர்ணயிக்கப்பட்டு அரசு அதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது 51 மைக்ரான் கவர் மற்றும் நிறுவன முகவரி கொண்ட கவர்களையும் மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே நிறுவன முகவரி கொண்டு அச்சிட்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
வேலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ரோஷி (.வயது 13) பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார்.தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு
Next Story






