என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சிங்காரப்பேட்டை அருகே குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 38) இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 13 வயதில், ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

    இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு இளங்கோவன் கடந்த 4-ந் தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு பேராடி  வந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இளங்கோவன் இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×