என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் விதிமுறைகளை பின்பற்றாத 27 வாகனங்களுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

    கிருஷ்ணகிரியில் பின்பற்றாத 27 வாகனங்களுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அரசின் விதிமுறைகளை பின்பற்றால் இயக்கிய 27 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

    கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே.சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆயவாளர் மாணிக்கம் மற்றும் குழுவினர் கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடி அருகில நேற்று வாகன சோதனையில் ஈடு பட்டனர். 

    கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், கறுப்பு ஸ்டிக்கர் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த வாகனங்கள், பம்பர் பொருத்தப்பட்டிருந்த வாகனங்கள், வாகனங்களில் ஜி அல்லது அ என எழுதப்பட்டிருந்த வாகனங்கள் போன்ற குற்றங்கள் தொடர்பான வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

    இதில் 27 வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றிற்கு  சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 
    இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தெரிவித்தார். 
    Next Story
    ×