என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை: தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47 அடியாகும். அணைக்கு வரும் நீரின் அளவை பொருத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட வேண்டி உள்ளது.

    எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. 
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×