என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஏ. மணிகண்டராஜாவுக்கு, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,
நகர செயலாளராக மணிகண்டராஜா தேர்வு
ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக மணிகண்டராஜா தேர்வு செய்யப்பட்டார்.
ராஜபாளையம்
தி.மு.க. 15-வது கட்சி உட்தேர்தலில் ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக எஸ்.ஏ. மணிகண்டராஜா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சரும், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் தேர்தல் ஆணையாளர் சீனிவாசன் முன்னிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர். சுப்புராஜ், ராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நகர அவைத்த லைவராக பிச்சைக்கனி, துணைசெயலாளர்களாக (பொது) முகமது இக்ஷாஸ் இப்ராகிம், காளிராஜன், மகளிரணி துணை செயலாளராக (ஆதி)பொன்னுத்தாய், பொருளாளராக செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக இமாம்ஷா,பொன்னுச்சாமி, அர்ச்சனா ஆகியோரும் வைரமுத்து,முத்துமணி, நாகூர்அலி,மதியழகன், முனியாண்டி, ராணிபாலாதேவி,ஜோசப், ராஜன், பார்த்திபன், பிரகாஷ், பழனிசாமி, கார்த்திக் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்க ளாகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story






