search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொள்ளாச்சி காவலர் குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

    காவல்துறை வீட்டு வசதி வாரிய காவல்துறை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    பொள்ளாச்சி: 

    தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பொள்ளாச்சி பகுதியில் காவலர் குடியிருப்பு கட்ட எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை வைத்திருந்தார். 
     
    இந்நிலையில், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவலர் குடியிருப்பு கட்டுவது தொடர்பாக அறிவிப்பு வெளியானது.  

    இந்த நிலையில் நேற்று காவல்துறை வீட்டு வசதி வாரிய காவல்துறை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
     
    இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 266 காவலர் குடியிருப்புகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல, வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட  பகுதியில் 30 வீடுகள் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. அரசு நிதி ஒதுக்கீடு செய்து பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தனர். ஆய்வின்போது பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி, கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் ஜனார்த்தனன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×