என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம்

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
    புதுக்கோட்டை:


    மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியராக சேவையாற்றி மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 

    பிறந்த நாளான மே 12-ந் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி ஆலங்கடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார்.

    ஊரக நலப்பணிகள் இனை இயக்குநர் டாக்டர் ராமு தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி வரவேற்றார். மாதினி முன்னிலை வகித்தார்,இதில் மருத்துவர்கள் லதா,மணிவண்ணன், கீதா மருத்துவமனை அனைத்து செவிலியர்கள், ஊழியர்கள்,

    தேசிய மருத்துவ செயல்பாட்டு மருத்துவர் சுபாகன்,இணை இயக்குநர் அலுவலகக. ண்காணிப்பாளர் உலகநாதன், ரவீந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்திக்கு நைட்டிங்கேல் விருது மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்கள் மற்று ம் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை இணை இயக்குனர்  டாக்டர்  ராமு  வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×