என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகார்
திருவேற்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுப்போக்கு- போலீசில் புகார்
ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தங்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது என்று போலீசில் புகார் அளித்தனர்.
பூந்தமல்லி, மே.13
திருவேற்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22) இவரது நண்பர் பரத்குமார் (20). இருவரும் நேற்று இரவு திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பிட்டனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர். அதில், “திருவேற்காடு, சிவன் கோவில் தெருவில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட தங்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. தரமான உணவு இல்லை. எனவே ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த ஓட்டலில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
Next Story






