என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்  நடந்த காட்சி.
  X
  ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

  நஞ்சுகொண்டாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நஞ்சுகொண்டாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  வேலூர்:

  வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

  இதையொட்டி கடந்த 48 நாட்களாக யஜமானர் சங்கல்பம், பிராத்தனா சீக்தம் புண்யாஹம், அக்னி பிரதிஷ்டை, கோ பூஜை, ஹோமம் மகா பூர்ணாஹீதி உள்ளிட்ட பூஜைகள் ஆஞ்சநேயருக்கு செய்யப்பட்டது. 

  கும்பாபிஷேக விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். 

  ஊர் பெரியதனம் மாணிக்கவேலு, துணை தலைவர் கன்னியப்பன், ஒன்றிய கவுன்சிலர் நதியாபுருஷோத்தமன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராம்ராஜ் வரவேற்றார். 

  காலை 6 மணி முதல் 7 மணி அளவில் அபய ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×