என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  திருக்கழுக்குன்றம் கோவில் திருவிழாவில் 3 பெண்களிடம் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கழுக்குன்றம் கோவில் திருவிழாவில் 3 பெண்களிடம் நகை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மாமல்லபுரம்:

  திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கழுக்குன்றத்தில் குவிந்தனர்.

  வேதகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரின் வடத்தை பக்தர்கள் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்கள் கூட்டத்தால் திருக்கழுக்குன்றம் நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது.

  இதற்கிடையே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மகும்பல் திருக்கழுக்குன்றம் வெள்ளாள தெருவை சேர்ந்த செல்லம்மாள், உட்பட 3 பெண்களிடம் 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

  இதுகுறித்து நகையை பறிகொடுத்தவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை பறித்து சென்ற கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×