என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்திய காட்சி.
  X
  கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்திய காட்சி.

  குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
  புதுச்சேரி:

  புதுவை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் 10 அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  1998-ல் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் சுமார் கால் நூற்றாண்டை கடந்து விட்டதால் பழுதாகி, வலிவிழந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து குழந்தைகள் மற்றும் அப்பகுதி மக்கள் மீது விழுந்து வருகிறது. இதனால் அக்குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த பீதியுடன் வசித்து வருகின்றனர்.

  இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதியதாக கட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். கடந்த ஆட்சி காலத்தில் அப்போதைய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கட்டிடம் உறுதித்தன்மை வலுவிழந்து இருப்பதை உணர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியி ருப்புகளை கட்டித்தருவதாக உறுதியளித்தார். 

  ஆனால், இதுவரை புதிய குடியிருப்பு கட்ட பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

  இதுகுறித்து   உருளையன் பேட்டை  தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கோபால் இன்று புதுவை குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். 

  இதனையடுத்து குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அலுவலர் சிற்றரசு, உதவி பொறியாளர் அணில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்த விரைந்து வந்து நேரில் பார்வையிட்டனர். சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்ப டைக்காமல் உள்ள குடி யிருப்புகளுக்கு மாற்றிவிட்டு, இந்த குடியிருப்பை இடித்து புதியதாக கட்டித்தர அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக மக்கள் முன்னிலையில் உறுதியளித்தனர்.
  Next Story
  ×