search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    file photo
    X
    file photo

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது உறுதி - அமைச்சர் பேட்டி

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது உறுதி என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:
    சட்டசபை கூட்டத்தொடர் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நல்ல முறையில் நடந்தது. பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆன்லைன் சூதாட்டம் பாதிப்பு குறித்து நன்கு உணர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    ஆன்லைன் சூதாட்டம் ரத்து தொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தில் சரத்துகள் சரியில்லை என்று கூறி கோர்ட் ரத்து செய்தது. அதுபோல் இல்லாமல் அந்த சட்ட சரத்துக்களில் திருத்தம் கொண்டுவந்து சட்டத்ைதை அமல்படுத்த கோர்ட் உத்தரவிட வேண்டும் என்ற ேநாக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

    மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வந்த பின்னர் ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்வா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிச்சயமாக ஆன்லைன் சூதாட்டத்தை ஏழை, எளிய மக்களின் நலனுக்காக ரத்து செய்வது உறுதி. 

    கவர்னர் மற்றும் ஜனாதிபதி தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை. இருப்பினும் கவர்னர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பல்வேறு கருத்துகளை தெரிவத்துள்ளது. ஒருவர் கோர்ட்டுக்கு சென்றால் பல்வேறு தீர்ப்புக்கள் வரலாம். 

    அதற்கு நாங்கள் ெபாறுப்பல்ல. 7பேர் விடுதலை தொடர்பாக தி.மு.க. என்றைக்குமே ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இது குறித்து பேச விரும்பவில்லை. கச்சத்தீவை மீட்க வேண்டும என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
    Next Story
    ×