என் மலர்
உள்ளூர் செய்திகள்

filephoto
பேருந்தின் மீது மோதி மயில் உயிரிழப்பு
பேருந்தின் மீது மயில் மோதி உயிரிழந்தது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஓடும் பேருந்தின் மீது மோதிய மயில் உயிரிழந்தது. கறம்பக்குடியில் இருந்து தேனிப்பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
துவார் ஆண்டிகுளபெண்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் பறந்துவந்த ஆண் மயில் ஒன்று பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் மோதி பேருந்துக்குள் விழுந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் மயிலின் அருகே வந்து பார்த்த போது மயில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்து சென்று விசாரணை மேற் கொண்டுவருகின்றனர்.
Next Story






