என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பாம்பு கடித்து விவசாயி பலி
கந்தர்வகோட்டையில் பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியை சேர்ந்த மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (33) விவசாயக் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முருகேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
பாம்பு கடித்து இறந்த முருகேசனுக்கு சாந்தி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து ஒரு மாதம் ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
Next Story






