search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    காரிமங்கலம் அருகே தாசில்தாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    காரிமங்கலம் அருகே தாசில்தாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரிமங்கலம்

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் அடிலம் பஞ்சாயத்தில் சீத்தியம்பட்டி முதல் வி.எம் கொட்டாய் இடையே சுமார் 100 மீட்டர் சாலை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சனை நீண்ட நாள் இருந்து வந்துள்ளது. 

    சுமார் 15 ஆண்டுகால பிரச்சனையை தீர்க்க நேற்று முன்தினம் 5 கிராம ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தனியார் வசம் இருந்த அந்த சாலையை பொது சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து குண்டும் குழியுமாக இருந்த அந்த பகுதியை அருகிலிருந்த ஏரியில் மண் எடுத்து வந்து சாலை போட்டுள்ளனர். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் ஆர்டிஓ சித்ரா விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

    இதைத்தொடர்ந்து காரிமங்கலம் தாசில்தார் வினோதா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை முறையாக மேற்கொள்ளாமல், மண் எடுத்ததாக திமுக பஞ்சாயத் தலைவர் தீபா அன்பழகனுக்கு சொந்தமான ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்ய முற்பட்டனர். 

    அப்போது தாசில்தாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாசில்தாரை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் தீபாஅன்பழகன் தலைமையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி தினகரன், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். 

    இச்சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாசில்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×