search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி கருமண்டபம் நேஷனல் நகர் பகுதியில் பழுதடைந்த மின் கம்பத்தை படத்தில் காணலாம்.
    X
    திருச்சி கருமண்டபம் நேஷனல் நகர் பகுதியில் பழுதடைந்த மின் கம்பத்தை படத்தில் காணலாம்.

    பழுதான மின் கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

    திருச்சி மாநகரில் உடைந்து விழும் நிலையில் உள்ள பழுதான மின் கம்பங்களை சீரமைத்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி நிர்வாகம் மக்கள் குறைகளை தீர்ப்பதில் அதிதீவிரம் காட்டி வருகிறது. பொது மக்களின் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.    

    இந்த நிலையில் திருச்சி மாநகர் பகுதிகளான கருமண்டபம், தில்லைநகர், தென்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களின் முக்கிய குறையாக இருப்பது தெருக்களில் பழுதடைந்த மின்கம்பங்கள் தான்.

    இதை சரி செய்வதற்காக பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளை அணுகுகிறார்கள். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருமண்டபம் நேஷனல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:

    எங்கள் பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று நீண்ட நாள்களாக பழுதடைந்துள்ளது. அதன் அடிப்பகுதி தூர்ந்து போய் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயம் நீடிக்கிறது. அந்த வழியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ல அச்சப்பட்டு வருகிறார்கள். 

    இது குறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அத்துடன் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் இந்த விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த மின் கம்பத்தை சரி செய்து தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×