என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் கொண்டுவந்த பூக்களை படத்தில் காணலாம்
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, அப்பகுதி மக்கள் பூக்களை தட்டுகளில் ஏந்தியவாறு ஊர்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனர்.
தொடர்ந்து, கோயிலில் அம்மன் முன்பு மலர்களை வைத்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். கோவில் திருவிழா வரும் 15-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து,
கோயிலில் மண்டகபடிதாரர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகளும், வீதியுலாவும் நடைபெறும், 23-ந் தேதி தேதி தேரோட்டத்திருவிழா நடைபெறுகிறது.
Next Story






