என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டாட்சியர் விஸ்வநாதன் பயிற்சி பெற்ற 35 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி காட்சி.
    X
    வட்டாட்சியர் விஸ்வநாதன் பயிற்சி பெற்ற 35 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி காட்சி.

    பேரிடர் மேலாண்மை பயிற்சி

    பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை சார்பில் மழையூர், தீத்தானிப்பட்டி, வெள்ளாளவிடுதி, எம்.தெற்க்கு தெரு உள்ளிட்ட 8 கிராமத்தை சேர்ந்த  தன்னார்வலர்ள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    குழந்தை ராசு தலைமையிலான தீயணை ப்பு துறையினர் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ் வநாதன் தலைமையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

    சுகாதார துறை சார்பில் பேரிடர் காலங்களில் விபத்துகள் ஏற்பட்டால் முத லுதவி என்ன செய்வது குறித்து வட்டார சுகாதார மேற்ப்பார்வை யாளர் பழனி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக வ ட்டாட்சியர் விஸ்வநாதன் பயிற்சி பெற்ற 35 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், சுகாதார துறை மேற்ப்பார்வையாளர் பழனி, குழந்தைராசு தலைமையிலான தீயணைப்பு துறையினர், மழையூர் வருவாய் ஆய்வாளர் அன்னக்கொடி, கிராம நிர்வா க அலுவலர் சிந்து, 

    அதிரான்விடுதி கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×