என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மாயமான முதியவர் தூக்கில் பிணமாக மீட்பு

    மாயமான முதியவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  மாங்கோட்டை மேலப்ப ட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60 ). கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

    உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் தேடியும் கிடைக்காததால் வேலுச்சாமியின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை தேடிவந்தனர்.

    இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள  சுரேஷ் என்பவரது தைலமரக் காட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல், இன்ஸ்பெக்டர் அழகம்மை சப் இன் ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. அதனை மீட்டு விசாரணை நடத்தியதில், இறந்தவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாயமான வேலுச்சாமி என்பது தெரியவந்தது.
    அதனை தொடர்ந்து வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டாரா, வேறு யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×