search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
    X
    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

    முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்.

    முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பிரசித்தி பெற்ற கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந் மாதம் 25-ந் தேதி பூச்சொரிதல்,  கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோவிலில் கலை நிகழ்ச்சிகள், சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தன. தொடர்ந்து 12 கிராம மக்கள் தங்களது வீடுகளிலும் கோவில் வாசலிலும், பொங்கல் பொங்கல் வைத்து வழீபட்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் கோவிலில் திரண்ட பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


    தேரோட்டத்ைத முன்னிட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை லங்குடி, பள்ளத்திவிடுதி, காட்டுப்பட்டி, கட்ராம்பட்டி, கோவில்பட் டி, கீழாத்தூர், கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, காட்டுப் பட்டி ஆகிய 12 கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×