என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தெற்கு சூரங்குடி அருகே வாகனம் மோதியதில் தொழிலாளி படுகாயம்
தெற்கு சூரங்குடி அருகே வாகனம் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
நாகர்கோவில்:
கணபதிபுரம் அருகே உள்ள தெக்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வடக்குச் சூரங்குடியில் வேலை செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
ஈத்தாமொழி சாலையில் வந்தபோது தெற்கு சூரங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிவ க்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிவக்குமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டு உள்ளார். விபத்து குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி,
போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
Next Story






