search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.ஐ.ஜி. ஆய்வு
    X
    டி.ஐ.ஜி. ஆய்வு

    கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் டி.ஐ.ஜி. தலைமையில் திடீர் ஆய்வு

    கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவிலில் டி.ஐ.ஜி. தலைமையில் திடீர் ஆய்வு நடந்தது.
    நாகர்கோவில்:

    கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோவில் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. செவ்வாய்கிழமை 10-ம் திருவிழாவில் அம்மன் தென் வீதி ஆறாட்டு தேங்காபட்டணம் கடலில் நடக்கிறது. தொடர்ந்து இரவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    இந்த நிகழ்ச்சிகளில் குமரி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று  காலை நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி.  பிரவேஷ் குமார் தலைமையில் கூட்டாலுமூடு கோவிலில் திடீர் ஆய்வு நடைபெற்றது. 

    இந்த ஆய்வில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஹரி கிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன்,  ஈஸ்வரன், கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் ஆகியோர் கோவில் தலைவர் குமார், செயலாளர் சந்திரகுமார், பொருளாளர் சவுந்தரராஜன், துணை தலைவர் முருகன், இணை செயலாளர் துளசிதாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். 

    தொடர்ந்து கோவிலில் வாண வேடிக்கை நடக்கும் பகுதியையும், தேங்காபட்டணத்தில் கடலில் அம்மன் ஆறாட்டு நடக்கும் பகுதியையும் பார்வையிட்டனர். பின்னர் புதுக்கடை போலீஸ் நிலையத்திலும் பார்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்டனர்.
    Next Story
    ×