என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  துடியலூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி கீேழ விழுந்தார்.
  கோவை:

  கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ் (வய 47). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் எஸ்.எஸ். நகரில் உள்ள ஒரு தோட்டத்ததில் தேங்காய் பறிப்பதற்காக சென்றார். 

  தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

  ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சின்னராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  கோவை கே.வடமதுரை அருகே லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 25). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு  முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

  இதனால் கோகுல்ராஜ் கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  Next Story
  ×