search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் சமீரன்
    X
    கலெக்டர் சமீரன்

    தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆராய்ச்சிகள்- கலெக்டர் சமீரன் தகவல்

    தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர்  சமீரன்  தலைமையில்  ஆய்வு நடைபெற்றது.
     
     அப்போது மேட்டுப்பாளையம் ஆதியூர், புரவிபாளையம்  பகுதிகளில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடுதல் , மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தாவர நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், வேளாண்துறையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நவீன இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

    தொடர்ந்து கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு உச்சகட்டமாக இருந்த காலத்தில் தமிழக முதல்-அமைச்சரின்  நடவடிக்கைகள் காரணமாக தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா  பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
     
    27 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மாவட்டத்தில்  முதல் டோஸ் தடுப்பு ஊசி  99 சதவீதம் பேர் செலுத்தப்பட்டு தமிழகத்தில் முதல் மாவட்டமாக  திகழ்கிறது. தமிழக முதல்வரின்  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்  காரணமாக மாவட்டத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

     நான்காவது அலை பரவும் சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில்  மாவட்ட எல்லைகளில் தொடர்ந்து வெளி மாநிலங்களில்  இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் நோய் பரவல் என்பது மாவட்டத்தில் இல்லை.

    90 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டும். பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.
     
     தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் ஆய்வுகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவி ல் இந்த நோயை முழுமை யாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

    கொப்பரை கொள்முதலை பொறுத்தவரை மாவட்டத்தில் 3 கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில்  விவசாயிகள் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் அரசின் கொப்பரை கொள்முதலை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  
    Next Story
    ×